தால் ஏரி அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு-நான்கு பேர் காயம் !

Friday, November 16, 2012

உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான காஷ்மீரின் தால் ஏரி அருகே பயங்கரவாதிகள் நேற்று நடத்திய துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் காயமடைந்தனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி அருகே அரசு சார்பில் நடத்தப்படும் ஹோட்டல் ஒன்றில் நேற்று அத்து மீறி நுழைந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் ஹோட்டலில் உள்ள மதுபான பிரிவில் பணியாற்றும் முஷ்டாக் அஹமது என்பவர் உயிரிழந்தார்.

மேலும் 4 தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்று போலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.