காங்கிரஸ் கட்சி பொது செயலாளர்களில் ஒருவரான திக்விஜய்சிங் தெரிவிக்கும் கருத்துக்கள் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனால் அரசியல்வாதிகளில் அவரை அவசர குடுக்கை என்கிறார்கள்.
திக்விஜய்சிங் எந்த விஷயத்தையும் உறுதி செய்து கொள்ளாமலே பேசி விடுவதுண்டு. ஆனால் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பால் தாக்கரே விஷயத்திலும் அவர் தெரிவித்துள்ள கருத்து பலரையும் அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது.
திக்விஜய்சிங் நேற்று டுவிட்டர் இணையத்தளத்தில் தன் பக்கத்தில் வெளியிட்ட ஒரு செய்தியில், பால்தாக்கரேயின் திடீர் மரணத்துக்கு வருந்துகிறேன். அவரது கொள்கைகள் ஏற்புடையவை அல்ல. ஆனால் அவர் துணிச்சலை போற்றுகிறேன். உத்தவ் தாக்கரேக்கு என் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இணையத்தளத்தில் இப்படி உளறிக் கொட்டிய திக்விஜய்சிங்குக்கு சிறிது நேரம் கழித்தே உண்மை தெரிய வந்தது. பதறிப்போன அவர் உடனே மீண்டும் டூவிட்டர் இணையத்தளத்தில் தன் கருத்தை வெளியிட்டார். அதில் அவர் பால்தாக்கரே பற்றி அவசரப்பட்டு தவறான தகவலை வெளியிட்டு விட்டேன். இதற்காக உத்தவ் தாக்கரேயிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.