பதவி விலகிய சிட்டி குழுமத்தின் தலைவர் !

Wednesday, October 17, 2012

அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான சிட்டி குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விக்ரம் பண்டிட் பதவி விலகினார்.

இந்தியரான அவர் மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் பிறந்தவர். 2007 டிசம்பர் முதல் இப்பொறுப்பில் இருந்து வந்தார். மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து வங்கியை மீட்டு வந்தார்.

இந்நிலையில் திங்கள்கிழமை வெளியான சிட்டி குழும காலாண்டு நிதிநிலை அறிக்கையில் நிகர லாபம் 88 சதவீதம் சரிந்தது. இதையடுத்து அடுத்த நாளிலேயே விக்ரம் பதவி விலகியுள்ளார். வங்கியின் இயக்குநர் குழுவில் இருந்து அவர் வெளியேறிவிட்டார். இதையடுத்து புதிய தலைமைச் செயல் அதிகாரியாக மிச்செல் கார்பட் தேர்வு செய்யப்பட்டார்.

பதவி விலகியது தொடர்பாக விக்ரம் பண்டிட் கூறியது: என்னுடன் அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.