ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பிரதமர் மன்மோகன் சிங்கும்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இன்று தனித்தனியாக சந்தித்துப் பேசினர்.மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்தே இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கலாம் என்றும்,இந்த வாரத்தில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு கட்டுப்பாடு மற்றும் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகளை கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகியது. அத்துடன் அந்த கட்சியைச் சேர்ந்த 6 அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் அதற்கு முன்னதாகவே ராஜினாமா செய்திருந்தனர்.
இந்த ராஜினாமாவால் முக்கிய இலாகாக்களுக்கு அமைச்சர்கள் இல்லாத நிலையில், அந்த பொறுப்புகளை 8 அமைச்சர்கள் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்கள்.இதனால் அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மத்திய அமைச்சரவையை பெரிய அளவில் மாற்றி அமைக்க பிரதமர் மன்மோகன்சிங் திட்டமிட்டுள்ளார்.ஆனால் கேபினட் பொறுப்புகளை யார்-யாருக்கு வழங்கலாம் என்பது குறித்து அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார்.கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை நடந்த இந்த சந்திப்பின்போது,அமைச்சரவை மாற்றம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே மன்மோகன் சிங்கை தொடர்ந்து,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஜனாதிபதியை சந்தித்துப் பேசினார்.
வெள்ளிக்கிழமை அமைச்சரவை மாற்றம் ?
இதனால் இந்த வாரமே மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என்றும்,அநேகமாக வருகிற வெள்ளி அல்லது சனிக்கிழமையன்று இது நிகழலாம் என்றும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.