தேவர் குரு பூஜைக்கு சென்ற 3 பேரை பரமக்குடி அருகே உள்ள பாம்புவிழுந்தான் மற்றும் பொன்னையாபுரம் பகுதியில் ஒரு தரப்பினர் கல் மற்றும் கம்பால் அடித்துக் கொலை செய்தனர்.
பரமக்குடி அருகே உள்ள மேலப்பெருங்கரையைச் சேர்ந்த 14 பேர், வேன் ஒன்றில் எம்.நெடுங்குளம் வழியாக செவ்வாய்க்கிழமை பசும்பொன் சென்றுள்ளனர். வழியில் வெங்காளூரில் அவர்களது வாகனத்தை மறித்து ஒரு தரப்பினர் தாக்கினார்களாம்.
பின்னர், மாற்று வழியாகச் சென்றபோது, பாம்புவிழுந்தான் பகுதியில் வேனை மறித்து, அதில் வந்தவர்களை ஒரு கும்பல் தாக்கியதாம். இதில் வேனில் சென்ற முத்துக்குமார், கணேசன் உள்பட 13 பேர் சிறுசிறு காயங்களுடன் தப்பி, பரமக்குடி காவல் நிலையம் வந்துள்ளனர்.
வேன் டிரைவர் விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள டி.வேலங்குடியைச் சேர்ந்த மலைராஜ் மகன் சிவக்குமார் (27), தப்பி ஓடும்போது அந்தக் கும்பல் விரட்டி அடித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
வேறு இருவர் கொலை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அல்லிநகரைச் சேர்ந்த மலைக்கண்ணன், கீழராங்கியத்தைச் சேர்ந்த வீரணன் ஆகிய இருவரும் காளையார்கோவில் அருகே கட்டட வேலை பார்த்துவிட்டு பசும்பொன்னுக்குச் சென்றுள்ளனர். அந்தப் பகுதியிலிருந்த ஒரு தரப்பினர் இருவரையும் கல்லால் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.