பதவி விலக மாட்டேன்: மன்மோகன் சிங் திட்டவட்டம்!

Friday, August 31, 2012

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பா.ஜனதாவின் கோரிக்கையை நிராகரித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், எதிர்கட்சிகளின் நிர்ப்பந்ததிற்கு பணிந்து, தாம் பதவி விலகப்போவதில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இது விஷயத்தில் மவுனமாக இருப்பதே சிறந்தது என்று கூறியுள்ள அவர்,
நாடாளூமன்றத்தை முடக்குவது ஜனநாயக விரோதம் என்றும்,நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தைப் பயன்படுத்தி மத்திய அரசை கவிழ்க்கும் சதியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம் குறித்து மத்திய அரசின் நிலைப்பாட்டை விளக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஈரானில் நடைபெற்ற அணி சேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, இன்று நாடு திரும்பும் வழியில், விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையிலேயே மன்மோகன் சிங் இவ்வாறு கூறினார்.