கருணாநிதியை சாடும் தமிழருவி மணியன் !

Thursday, August 16, 2012

நேற்று புதன்கிழமை சேலத்தில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே, ஈழத் தமிழரின் கண்ணீரில் அரசியல் செய்வதை கருணாநிதி கைவிட வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் வலியுறுத்தினார்.

அங்கு அவர் முக்கியமாகத் தெரிவித்த விடயங்கள் வருமாறு,

கருணாநிதி அண்மையில் நடத்திய டெசோ மாநாட்டால் ஈழத் தமிழர்களுக்கு எள்ளளவும் பயன் இல்லை.

மாநில அரசின் தடுப்பு நடவடிக்கை இல்லாமல் இருந்திருந்தால், எந்தத் தடயமும் இல்லாமல் அந்த மாநாடு முடிந்திருக்கும்.

கூட்டம் கூடும் உரிமையையும், கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையையும் தடுப்பது ஜனநாயக அரசின் நேர்மையான செயல்பாடாக இருக்க முடியாது.

மாநாடு நடத்துவதைத் தடுக்க முயன்ற மாநில அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

டெசோ மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்தில் மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு அரசியல் வாழ்வாதார உரிமையைப் பெற்றுத் தர வேண்டும் எனத் தீர்மானம் போடப்பட்டுள்ளது.

மத்திய அரசில் திமுக தற்போது இடம் பெற்றுள்ளது. செய்ய வேண்டிய இடத்தில் இருந்து கொண்டுச் செய்ய முடியாத மக்களைத் திரட்டி தீர்மானத்தை மட்டும் போடுவது கருணாநிதியின் கபட நாடகத்தைக் காட்டுகிறது. ஈழத் தமிழர்களின் கண்ணீரில் அரசியல் நடத்துவதை அவர் கைவிட வேண்டும்.