ட்விட்டர், ஃபேஸ்புக், தனி இணையதளம் எனக் கண்ட திமுக தலைவர் கருணாநிதி, அடுத்த முக்கிய சமூக வீடியோ தளமான யு ட்யூபிலும் தனக்கான பக்கத்தை ஆரம்பித்து, அப்லோட் செய்யவும் ஆரம்பித்துள்ளார். http://www.youtube.com/thalaivarkalaignar என்ற முகவரியில் கருணாநிதியின் யு ட்யூப் தளம் செயல்படத் தொடங்கிவிட்டது!
இந்த பக்கத்தில் திமுகவின் நிகழ்ச்சிகள், கலைஞரின் பேச்சுக்களை தொடர்ந்து அப்லோட் செய்யப் போகிறார்களாம். யு ட்யூபில் முதல் வீடியோவாக, கேகே நகரில் நடந்த கருணாநிதியின் 89 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் இடம்பெற்ற அவரது 48 நிமிட உரை இடம்பெற்றுள்ளது.
திமுகவினர் ஆர்வம்...
தங்கள் தலைவர் கருணாநிதி இணைய வெளியில் மும்முரமாக இருப்பது புரிந்து, கட்சியின் தொண்டர்கள் பலரும் தாங்களும் பேஸ்புக், ட்விட்டரில் கணக்கு தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சொந்தமாக இணைப்பு இல்லாதவர்கள், இதற்காக இணையதள மையங்களை நாடி வருகின்றனர்.