சென்னை
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த மீனவர்களால்
உபயோகப்படுத்தப்படும்
மண்ணெண்ணெயினால் இயக்கப்படும் வெளிபொருத்தும் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டு படகிற்கு மானிய விலையாக லிட்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் வீதம் அளிக்கப்பட்டு வந்த மண்ணெண்ணெயின் அளவை 200 லிட்டரிலிருந்து 250 லிட்டராக உயர்த்தி வழங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இதனால் அரசுக்கு கூடுதலாக 37 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும். எனவே, இந்த ஆண்டு மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் 250 லிட்டர் மண்ணெண்ணெய் திட்டத்திற்காக 47 கோடியே 60 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த மீனவர்களுக்கு கூடுதலாக ஒரு படகிற்கு 100 லிட்டர் வரை வெளிச் சந்தை விலையில் வழங்குவதற்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சரின் இந்த நடவடிக்கைகள் கிராமங்கள் வளர்ச்சி அடையவும், கிராமப் பொருளாதாரம் மேம்படவும் வழிவகுக்கும்.