தமிழகம் குறித்து கவலையில்லை :இலங்கை அரசு ஆணவபேச்சு !

Friday, July 20, 2012

கொழும்பு : 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவை யாராலும் அழிக்க முடியாது. 
என்று இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

 அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பேசிய கெஹெலிய ரம்புக்வெல இந்தியாவுக்கும் உள்ள உறவை யாராலும் அழிக்க முடியாது. இதற்கு உதாரணமாக, புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளதைக் கூறலாம்
தமிழ்நாட்டின் எதிர்ப்புகள் குறித்து இலங்கை அரசு அலட்டிக் கொள்ளாது. ஆண்டுக்கு சுமார் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு படையினர் இந்தியாவில் பயிற்சி பெறுகின்றனர். இலங்கை படைகளுக்கு பயிற்சி வழங்கும் பிரதான பங்குதாரர் இந்தியாதான்.

சமீபத்தில் இந்தியாவில் பயிற்சி பெற சென்ற 9 இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டதற்குக் காரணம், வீரர்களின் பாதுகாப்பு கருதியே தானேத் தவிர தமிழக எதிர்ப்புக்கு பயந்து அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.