சீனாவின் கான்சு மாகாணத்தில் ஏற்பட்ட பலத்த மழை வெள்ளத்தில் 40 பேர் பலியாகினர். சீனாவின் வடமேற்கு பகுதியான கான்சு மாகாணத்தின் மலைகள் நிறைந்த மின்சியான் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆறு நகரங்களில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
பல வீடுகளும், மருத்துவமனை, பள்ளிகளும் பாதிக்கப்பட்டன. மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளம் காரணமாக ஏழாயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை இந்த மழைக்கு 40 பேர் பலியாகியுள்ளனர், 18 பேரை காணவில்லை.
இங்குள்ள 30 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்புப் படையினர் போர்வைகளையும், உடைகளையும் வழங்கி வருகின்றனர்.