கூடங்குளம் பிரச்னை: தீர்ப்பாணையம் முன் இன்று விசாரணை !

Monday, May 14, 2012

வள்ளியூர்,

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தீர்ப்பாணையம் முன் சென்னையில் இன்று பொது விசாரணை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக பொது விசாரணை நடத்த அணுமின் நிலையத்துக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.பி.ஷா தலைமையில் தீர்ப்பாணையத்தை அமைத்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பாணையம், சென்னை லயோலா கல்லூரி லாரன்ஸ் சுந்தரம் அரங்கத்தில் திங்கள்கிழமை பொது விசாரணை நடத்துகிறது. இதில், வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன், சுவாமி அக்னிவேஷ் மற்றும் இடிந்தகரை மக்கள் கலந்து கொள்கின்றனர்.
கூடங்குளம் போராட்டம், மக்கள் மீது காவல்துறையினரின் அத்துமீறல் புகார்கள் குறித்து விசாரணை நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்த குறும்படம் திரையிடப்படுகிறது.