சவுரவ் கங்குலிக்கு எம்.பி.பதவி வழங்கும்படி கம்யூ.,கோரிக்கை

Sunday, April 29, 2012

புதுடில்லி: பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கியதைப் போல், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கும், எம்.பி., பதவி வழங்க வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குருதாஸ் தாஸ் குப்தா நேற்று காலை, பார்லிமென்டிற்கு வெளியே நிருபர்களிடம் கூறியதாவது: கிரிக்கெட் வீரர் சச்சின், பழம் பெரும் நடிகை ரேகா, தொழிலதிபர் அனு ஆகா ஆகியோரை, ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்துள்ள முடிவை, நான் வரவேற்கிறேன். 

அதே நேரத்தில், பிரபல கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்குலிக்கும், ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்குவது குறித்து, பரிசீலிக்க வேண்டும். 

திரைப்பட நடிகர்கள் மட்டுமல்லாது, எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோருக்கும், ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்குவது குறித்து, பரிசீலிக்கப்பட வேண்டும்.