தேவரின பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்க இயலாது- காவல்துறை !

Monday, December 3, 2012

ஸ்ரீ பசும்பொன் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை அன்று தேவரினத்தவர்கள் மீது தலித்துகள் தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சை பெற்றுவந்தபோதிலும் இதுவரை 12 பேர்கள் பலியாகி உள்ளனர்.

மேலூர் பொதுக்கூட்டம் :


இந்நிலையில் தேவரின முக்குலத்தோர் கூட்டமைப்பின் தொடர் போராட்டங்களுக்கு
பல்வேறு வகையில் போலீசார் தொல்லை கொடுப்பதாகவும் , நடத்த விடாமல் அனுமதி மறுக்கப்படுவதாகவும் போராட்டத்தினை காவல்துறை திட்டமிட்டு முடக்குவதாகவும் கூறப்பட்டு வந்தது. மீண்டும் ஒரு தேவர் ஜெயந்திக்கு தடை, சிவகங்கையில் சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்கு , புளியங்குளம் செல்லவிடாமல் தடுத்தல், ஒத்தக்கடை தியாகிகள் படத்திறப்பு விழாவிற்கு தடை ஏற்படுத்தும் விதமாக மண்டபத்தாருக்கு மிரட்டல் என்று அனைத்து போராட்டங்களையும் போலீசார் நடத்த விடாது செய்துவந்தாக தகவல் ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக மேலூரில் படத்திறப்பு விழா மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தேவரின முக்குலத்தோர் கூட்டமைப்பினர் காவல்துறையிடம் அனுமதி கோரியுள்ள நிலையில் நேற்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உசிலை பொதுக்கூட்டம் :

தேவரின படுகொலையை கண்டித்து நவம்பர் 20 ம் தேதி உசிலம்பட்டியில் ஜி எம் ஸ்ரீதர் வாண்டையார் அவர்கள் தலைமையில் இயங்கும் அகில இந்திய தேவரின ஒருங்கிணைப்புக் குழு கண்டன பொதுக்கூட்டம் நடத்தியது. அந்தக் கூட்டத்தை சரிவர நடக்கவிடாது ஆரம்பம் முதலே போலீசார் தனது அதிகாரங்களை பயன்படுத்தி வந்தனர். பின்னர் மக்கள் கூட்டம் அதிகமாக அதிகமாக காவல்துறை சரியான பாதிகாப்பு வழங்காமல் குழப்பத்தை ஏற்படுத்தியது. பின்னர் மேடையில் இருந்த தலைவர்கள் காவல்துறையை எச்சரித்து பேசினர். மேலும் தேவரின மக்கள் இந்த அரசின் நிலைப்பாட்டை புரிந்துகொண்டு நமக்கான அரசியலை நாம் எடுக்கவேண்டும் என்றும் , இந்நிலை தொடருமானால் தென்னாட்டில் தேவர் நாட்டுக்கான போராட்டத்தை கையில் எடுப்போமென்று பேசப்பட்டது. இதையெல்லாம் காரணம் காட்டி “உசிலம்பட்டி கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் அளவிற்கு பேசியதாக கூறியதோடு இனிவரும் தேவரின பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்க இயலாது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மறுக்கப்பட்ட அனுமதி நகல் இணைக்கப்பட்டுள்ளது.

                                                                                                                                        courtsy-devartv