பிஜபூர்: கர்நாடக மாநிலத்தில் வீட்டுப்பாடம் முடிக்காததால் பள்ளிக்கு சென்றால் ஆசிரியை என்ன தண்டனை அளிப்பாரோ என்று பயந்து 4ம் வகுப்பு மாணவன் தீக்குளி்தது தற்கொலை செய்து கொண்டான்.
கர்நாடக மாநிலம் பிஜபூரைச் சேர்ந்தவன் அஜய்(10). அப்பகுதியில் உள்ள நீலகண்டேஸ்வரா வித்யா மந்திரில் 4ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் ஆசிரியை ராதிகா என்பவர் வீட்டுப்பாடம் கொடுத்துள்ளார். வீட்டுப்பாடம் முடிக்காத அஜய் வகுப்பிற்கு சென்றால் ஆசிரியை என்ன தண்டனை கொடுப்பாரோ என்று பயந்து கடந்த 28ம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தான்.
தீ எரியத் துவங்கியதும் சிறுவன் அலற ஆரம்பித்தான். அவனது அலறல் சத்தம் கேட்டு அவனது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் வந்து அவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தான்.
முன்னதாக சிறுவன் தான் தீக்குளித்ததற்கு ஆசிரியை ராதிகா பொறுப்பல்ல என்று தெரிவித்துள்ளான். சிறுவன் இறந்ததையடுத்து அவனது குடும்பத்திற்கு உள்ளூர் எம்.எல்.ஏ. ஒருவர் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளார்.