சென்னை: தன்னுடன் பணிபுரியும் சக பெண் பொறியாளரின் செல்போன் எண்ணை இணையதளத்தில் போட்டு பாலியல் தொழில் செய்பவர் என்று சித்தரித்த பெண் பொறியாளர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் பெண் பொறியாளர் அவர். சமீபத்தில் தனது செல்போன் எண்ணை இணையதளம் ஒன்றில் பார்த்த அவர், இவர் பாலியல் தொழில் செய்பவர் என்று கூறப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து சைபர் கிரைம் போலீஸில் அவர் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர். விசாரணையில், அந்தப் பெண் பொறியாளருடைய அலுவலகத்தில் பணியாற்றும் இன்னொரு பெண் பொறியாளர்தான் இப்படி செல்போன் எண்ணை இணையதளத்தில் வெளியிட்டார் என்று தெரிய வந்தது.
இதையடுத்து அந்தப் பெண் பொறியாளரை போலீஸார் கைது செய்தனர். தன்னுடன் பணிபுரியும் சக பெண்ணின் செல்போன் எண்ணைப் போட்டு அவரை தவறாக சித்தரித்த பெண்ணின் செயல் போலீஸாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.