மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் துரை தயாநிதி, தனது படத்தயாரிப்பு நிறுவனமான க்ளவுட் நைனின் அலுவலகத்தை சென்னையிலிருந்து மதுரைக்கே மாற்றிக் கொண்டுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியின்போது ஆரம்பிக்கப்பட்டது இந்த க்ளவுட் நைன். தயாரிப்பு,
விநியோகம் என படு பிஸியாக இருந்தது இந்த நிறுவனம். கடைசியாக மங்காத்தாவை தயாரித்து வெளியிட்டது.
இதற்கிடையே ஆட்சி மாறிய பிறகு, க்ளவுட் நைன் சட்டென்று அமைதி காட்டியது. இப்போது புதிய படம் ஒன்றைத் தயாரித்து வரும் நிலையில், நிறுவன உரிமையாளர் தயாநிதிக்கு கிரானைட் விவகாரத்தில் பெரும் சிக்கல் எழுந்தது.
அவரைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட, துரை தயாநிதி தலைமறைவாக இருந்தபடி முன்ஜாமீனுக்கு முயன்று வருகிறார்.
அவரது நடமாட்டத்தை போலீசார் தொடர்ந்து கவனித்து வருகின்றனர். க்ளவுட் நைன் அலுவலகத்தை தொடர்ந்து நோட்டமிட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக சென்னையில், பாரதிராஜாவின் பழைய வீட்டில் இயங்கி வந்த தனது அலுவலகத்தைக் காலி செய்துவிட்டு, அங்கிருந்த பொருட்களை மதுரைக்கே கொண்டுபோய்விட்டதாகக் கூறப்படுகிறது.