ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்கள் பணத்தை கடுமையாக விரயம் செய்து வருகின்றனர். சோனியா காந்தி தனது அயல்நாட்டுப் பயணங்களுக்காக ரூ.1880 கோடி செலவு செய்துள்ளதாக நரேந்திர மோடி கடும் குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தாக்கி பேசியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா தேவை இல்லாத செலவுகள் செய்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.
சோனியா தனது வெளிநாட்டு மருத்துவ சிகிச்சை பயணத்திற்காக கடந்த மூன்று ஆண்டுகளில் 1880 கோடி ரூபாய் செலவழித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது குறித்து பேசிய மோடி, அமெரிக்கா இந்தியாவில் சிறு வர்த்தகம் மற்றும் கடைகளை நிலைநிறுத்துவதற்கு முயற்சி செய்து வருகிறது,
ஆனால் பிரதமர் மன்மோகன் சிங்கோ இந்திய இளம் தலைமுறையினரை அழிவு பாதைக்கு வழி நடத்தி செல்கிறார் என்று கூறியுள்ளார்.
இது போன்று மக்கள் பணத்தை விரயம் செய்பவர்களை நாம் மன்னிக்க போகிறோமா? என்கிறார் மோடி.
சோனியா காந்தி ரூ.1880 கோடி தனது அயல்நாட்டுப் பயணத்திற்காக கடந்த 3 ஆண்டுகளில் செலவு செய்துள்ளதாக கூறியதையடுத்து யார் இந்தப் பணத்தைக் கொடுத்தது? விரைவில் பொது நல வழக்குத் தொடரப்போவதாக சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்.