ஆஸ்திரேலியா கல்வி நிறுவனங்கள் மூடல் :இந்திய மாணவர்கள் பாதிப்பு !

Thursday, October 4, 2012

புதுடில்லி:

ஆஸ்திரேலியாவில் மூன்று கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால் அதில் பயின்று வந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களி்ன் கல்வி ‌பாதிக்கப்பட்டுள்ளது

இது குறித்து இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய ஹை கமிஷனர் பீட்டர் வர்கீஸ்
இந்தியமாணவர்களின் கல்விக்கு பாதுகாப்பு அளி்க்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் கல்வி தரத்‌தை மேம்படுத்தும் விதமா‌கவே விக்டோரியா மாகாணத்தில் இரண்டு கல்வி நிறுவனங்களும், நியூ சவூத் வேல்ஸ் பகுதியில் ஒரு கல்வி நிறுவனங்களும் மூடப்படும் எனவும் வரும் 30ம் தேதிக்கு பிற‌கே கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என ஆஸ்திரேலிய கல்வி தர கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேற்கண்ட கல்வி நிறுவனத்தில் பயின்று வந்த 500 இந்திய மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்