அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா தலைமையில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் !

Monday, October 1, 2012

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து,மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு ஆகியவற்றினை மத்திய அரசு அறிவித்து. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் தனது ஆதரவினை கடந்த வாரம் விலக்கிக்கொண்டது.

இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராக இன்று டெல்லியில் தர்ணா நடக்கிறது.இதில் அக்கட்சியின் தலைவரும்,மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்து கொள்கிறார்.

இதற்காக நேற்று டெல்லி வந்த மம்தா, தனது கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்று டெல்லி ஜந்தர்மந்தரில் மம்தா தலைமையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில்,திரிணாமுல் காங்கிரஸ்எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.