மகராஷ்ட்ரா மாநிலம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது !

Wednesday, September 26, 2012

தேசியவாத காங்கிரசில் ஏற்ப்டடுள்ள மோதலையடுத்து, மகராஷ்ட்ரா மாநிலம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மகராஷ்ட்ரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரசும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்துகின்றன. சரத்பவாரின் மருமகன்‌ அஜித்பவார் அங்கு துணை முதலமைச்சர் உள்ளார்‍.


நீர்பாசனத்துறை ஊழல் தொடர்பாக அஜித்பவார் தனது பதவியை ராஜினாமா செய்தார்‍. இந்த பதவி விலகலுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் காரணம் என்று அஜித்பவாரின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்‍.

இதனால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. மகராஷ்ட்டிர மாநில -கூட்டணிக்கு அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தேசியவாத காங்கிரஸ் விலக்கி கொள்ள வேண்டும் என்று அஜித்பவார் கோஷ்டியினர் வலியுறுத்தி வருகிறார்கள்‍.

எனவே அஜித்பவார் கோஷ்டியினர் அரசுகளுக்கு தரும் ஆதரவை விலக்கி கொள்ளக்கூடும் என்று தெரியவருகிறது. இதனால் மகராஷ்டிர கூட்டணிக்கு அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

என்றாலும் நிலைமையை சரிசெய்துவிட முடியும் என்று மத்திய அமைச்சர் சரத்பவார் அறிவித்துள்ளார்‍. எத்தனை எம்எல்ஏக்கள் விலகினாலும் மகராஷ்ட்ரா அரசு கவிழாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்‍. இதனிடையே இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்த மகராஷ்ட்ரா முதல்வர் பிரதீவ்ராஜ் சவான் டெல்லி சென்றுள்ளார்


                                                                                                                     courtesy-captan news