பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கர்நாடகாவில் போதுமான அளவு பருவ மழை பெய்யாததால் அங்குள்ள பல மாவட்டங்களில் வறட்சி நிலவுவதாக ஷெட்டர் குறிப்பிட்டுள்ளார்.
பருவ மழை பொய்த்துள்ள காரணத்தால், தமிழக்த்திற்கு தொடர்ந்து தண்ணீர் வழங்க முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் 10 ஆயிரம் கன அடி நீரை தொடர்ந்து திறந்துவிடும் முடிவை பரிசீலித்து வருவதாகவும் ஷெட்டர் குறிப்பிட்டுள்ளார். வரும் 19 ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற உள்ள காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தில் கர்நாடகாவின் நிலை குறித்து விளக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பிரச்னையின் யதார்த்தத்தை புரிந்து கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் என்றும் ஜெகதீஸ் ஷெட்டர் வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதால், கிருஷ்ணசாகர், கபினி அணைகளில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.