அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது மத்திய அரசு: மம்தா !

Wednesday, September 26, 2012

கோல்கட்டா: மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

தனியார் டி.வி. ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில்,

மத்திய அரசில் ஊழல் மலிந்து விட்டது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை தமது கட்சி ஆதரிக்காது என்று தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டிய அவர், தனது கட்சியை வருமான வரித்துறை பிரச்னை எதிலேனும் சிக்க வைக்க முடியுமா என்பது குறித்து யோசித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

இது போன்ற ஒரு முடிவை சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ்வாடி ஆகிய கட்சிகளுக்கு எதிராக எடுக்க முடியுமா என கேள்வி எழுப்பிய அவர், பணபலம், ஆள்பலத்துடன் மாபியா போன்று மத்திய அரசு செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.