நாகை மாவட்டம் குத்தாலம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலை ஐந்தே நாட்களில் சிதிலமடைந்து வருவதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குத்தாலத்தை அடுத்த அம்பேத்கர் நகரை கோமல் கிராமத்தினுடன் இணைக்க தார்ச்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து புதிய தார்ச்சாலை அமைக்கக்பட்டது. ஆனால் ஐந்தே நாட்களில், சாலை தனித்தனியாக பெயர்ந்து வரத் தொடங்கியதால் பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திட்டப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில முறைகேடு செய்து தரமில்லாமல் சாலை அமைத்த ஒப்பந்தகாரர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.