ஊழல்களால் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலாக உள்ளது மத்திய அரசு : பா.ஜ. கருத்து !

Wednesday, September 26, 2012

ஊழல் விவகாரங்களில் சிக்கியுள்ள மத்திய அரசு மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல் என பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது. அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடை‌பெற்று வருகிறது. இதில் நிதின் கட்கரி, அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பாரதிய ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், மத்திய அரசு எந்த நேரமும் கவிழும் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் சூழலில் மக்களவைக்கு எந்த நேரமும் தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார். எதிர்க்கட்சிகளை மிரட்டி ஆதரவை பெற சிபிஐ.யை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டினார்.