இந்தியா ஏழை நாடு என்று யார் சொன்னது. இங்கே இருக்கும் தனியார் நிறுவனங்களின் நிர்வாகிகள் பெரும் சம்பளத்தொகையை கேட்டால் உங்களுக்கு தலையே சுற்றி விடும்.
ஜிண்டால் இரும்பு மற்றும் மின்உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நவீன் ஜிண்டால், இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறுபவராவார்.
அவரது சம்பளம் என்ன தெரியுமா? வருடத்துக்கு 73 கோடியே 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இதேபோல், சன் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகி கலாநிதி மாறன் ஆண்டொன்றுக்கு 57 கோடியே ஒரு ரூபாய் சம்பளம் பெறுகிறார்.
இதேஅளவு சம்பளத்தை, கலாநிதி மாறனின் மனைவி காவிரி மாறனும் பெற்று வருகிறார். ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பவன் முன்ஜல் 34 கோடியே, 47 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்.
உலகிலேயே அதிகம் சம்பளம் பெற்றவர் என்ற இடத்தில் இருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி, தற்போது 15-வது இடத்தில் உள்ளார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஆண்டு ஒன்றுக்கு 15 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்று வருகிறார். இந்த சம்பளத்தொகையில், நிறுவனத்தின் ஊக்கத்தொகை லாபத்தில் ஒரு பங்கு இவையும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது