தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக் கோரும் மனு மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் மாசுகாட்டுபாடு வாரியத்திற்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளதால் அதன் உரிமத்தை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்துள்ளார். மத்திய மாநில அரசுகளின் மாசுகட்டுபாட்டு வாரியம் தாக்கல் செய்துள்ள அறிக்கை தவறானது என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். மாசுகட்டுபாட்டு வாரியம் அனுமதி வழங்குவதற்கு முன்னதாகவே 44 மாதங்களாக ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்பட்டு வந்ததாக வைகோ குற்றச்சாட்டியுள்ளார்.
வைகோ மனு மீதான வழக்கு நீதிபதிகள் பட்நாயக், எச். எல். கோகுலே முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய பசுமை சுற்றுசூழல் அமைப்பின் சார்பாக வி. பிரகாஷ் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்நிலையில் போதிய நேரம் இன்மைக் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

courtsy-captan news