மத்திய அரசின் மானியத்தை தவிர்த்து வாங்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு, 750 ரூபாய் விலை நிர்ணயித்துள்ளது பொது மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெருமளவு நஷ்டத்தைச் சந்தித்து வருவதால், சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியத்தைக் குறைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. அதனால், “ஒரு வீட்டிற்கு, ஆண்டுக்கு ஆறு சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும். அதற்கு மேல் தேவைப்படுவோர், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அவ்வப்போது நிர்ணயிக்கும், சந்தை விலையை கொடுத்து, காஸ் சிலிண்டர் வாங்கிக் கொள்ள வேண்டும்’ என, அறிவித்தது.
அதேநேரத்தில் இந்த நிதியாண்டில் மீதமுள்ள ஆறு மாதங்களுக்கு, மூன்று சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும்’ என்றும் தெரிவித்துள்ளது. அதனால், அக்டோபர் 1ம் தேதி முதல், 2013, மார்ச் 31 வரையிலான, ஆறு மாத காலத்தில், ஒவ்வொரு வீட்டிற்கும், மூன்று சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில், அதாவது, 399 ரூபாய்க்கு வழங்கப்படும்.
அதற்குமேல், காஸ் சிலிண்டர் வாங்குவோர், ஒரு காஸ் சிலிண்டருக்கு, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள சந்தை விலையான, 756 ரூபாய் செலுத்தி வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே விலைவாசி உயர்வால் சிரமப்பட்டு வரும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு இந்த விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பொதுமக்களின் நலன் கருதி,காங்கிரஸ் கட்சி ஆளும், சில மாநிலங்கள், ஆண்டுக்கு ஒன்பது, சமையல் காஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும் என, அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தாவும், கோவில் பாஜகவும் இதே நடவடிக்கையை பின்பற்றுகின்றனர்.