ஹைதராபாத், அமிர்தசரசில் தாக்குதல் நடத்துவோம் - தலிபான் மிரட்டல் !

Thursday, November 29, 2012

அஜ்மல் கசாப் மரண தண்டனை வழங்கப்பட்டதற்கு ப‌ழி‌க்கு பழியாக ஹைதராபாத், அமிர்தசரசில் விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என்று தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

மும்பை தாக்குதலில் வெளிநாட்டவர் உட்பட 160 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுக்கும் இந்திய தீவிரவாத தடுப்பு பி‌‌ரிவினருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் அஜ்மல் கசாபை தவிர மற்ற தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதனிடையே குற்றம் நிரூபிக்கப்பட்ட தலிபான் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு கடந்த 21ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு பழிவாங்குவோம் என்று தலிபான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த அமைப்பை சேர்ந்த செய்தி தொடர்பாளர் அகமது மார்வத் என்ற தீவிரவாதி, பத்திரிகைக்கு போனில் அளித்த பேட்டியில், கசாப் மரணத்துக்கு நாங்கள் இந்திய மண்ணில் பழி வாங்குவோம். கசாப்பின் மரணம் வீண் போகாது. எங்கள் இயக்கத்தில் அவரை போல மேலும் பலர் உள்ளனர். அவர்கள் ஹைதராபாத், அமிர்தசரசில் உள்ளனர். அவர்கள் விரைவில் தாக்குதல் நடத்துவார்கள் என அகமது மார்வத் கூறியுள்ளார்.