புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் காளிங்க நர்த்தனக் கண்ணனாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவில் மூலவரான ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கிடந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் உற்ஸவர் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளுக்கு பல்வேறு வகையான அலங்காரம் செய்கிறது கோவில் நிர்வாகம். .
நிகழாண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமை (22.9.2011) உற்ஸவரான ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் மலையப்பசுவாமியாகவும், 2-வது சனிக்கிழமை (29.9..2012) ஆநிரைத் தலைவனாகவும் (பசுக் கூட்டத்தை மேய்ப்பவராக) பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
3-வது சனிக்கிழமையான இன்று 5 தலை பாம்பின் மீது நடனமாடும் வகையில் (காலிங்க நர்த்தனக் கண்ணன்) பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று மூலவர் ஸ்ரீரங்கநாதரையும், சிறப்பு அலங்காரத்தில் இருந்த ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளையும் தரிசித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ கல்யாணப் பெருமாள் கோவில் நிர்வாகமும், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்த ஜன சபாவும் செய்திருந்தது.