மானாமதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பசும்பொன் தேவர் ஜயந்தி விழா நடைபெற்றது.
மானாமதுரை சுந்தரபுரம் வீதியிலுள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலை முன்பு ஏ.விளாக்குளம் கிராம மக்கள் தேவர் உருவப்படத்துடன் ஊர்வலம் நடத்தினர். அதன்பின் சிலை முன்பு பொங்கல் வைத்து சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தச் சென்றவர்கள் சுந்தரபுரம் வீதியிலுள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மானாமதுரை அருகே உடைகுளம், கீழமேல்குடி, கிளங்காட்டூர், சங்கமங்கலம், கிருங்காங்கோட்டை உள்பட பல கிராமங்களிலும் தேவர் குருபூஜை நடத்தப்பட்டது.
காரைக்குடி:
காரைக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 105-வது ஜயந்தி விழாவையொட்டி, அவரது உருவச் சிலைக்கு தமிழ்நாடு வல்லம்பர் பேரவை சார்பில் செவ்வாய்க்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பேரவையின் மாநிலத் தலைவர் எஸ்.செல்லப்பன் ஏற்பாட்டின்பேரில் மாநிலச் செயல் தலைவர் அம்பாள் சி.சுப்பிரமணியன் தலைமையில் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாநிலப் பொதுச்செயலாளர் ஏஆர்.சுப்புராமன், மாநில அமைப்புச் செயலாளர் சொ. துரைசிங்கம், மாநிலப் பொருளாளர் ராமசாமி, மாநில துணைத் தலைவர்கள் கீழத்தெரு கருப்பையா அம்பலம், எஸ்ஆர் பட்டணம் ராவணன் அம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் பாலையூர் ஆண்டியப்பன், புதுப்பட்டி குமார், செஞ்சை மெய்யப்பன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அருள்பாண்டியன், கலையரசு, ஆண்டியப்பன், வடக்குத் தெரு வைரவன், பலவான்குடி லெட்சுமணன், அம்பாள் சுகுமாறன், தில்லைநாதன், வல்லம்பர் இளைஞர் பாசறை காரைக்குடித் தலைவர் சித. சிவா மற்றும் பேரவை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் தேவர் பேரவையினரால் தேவர் ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 105-வது ஜயந்தி விழா மற்றும் 50-வது குரு பூஜையை முன்னிட்டு திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே கரு.சுப்பிரமணியன் தலைமையில் தேவர் பேரவையினர், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், வர்த்தக நிறுவன வியாபாரிகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து காந்தி சிலை எதிரே பிரமாண்டப் பந்தலில் வைக்கப்பட்டிருந்த தேவர் திருவுருப் படத்துக்கு மாலையணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து தேவர் திருவுருவப் படத்துக்கு பேரூராட்சித் தலைவர் சோமசுந்தரம், துணைத் தலைவர் சையது, கவுன்சிலர்கள் சத்தியாசரவணன், ஆனந்தன், செந்தில்குமார், சண்முகமுத்து, உதயசண்முகம், பாண்டிமீனாள், தமயந்தி, மலைச்சாமி, மற்றும் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் ஒன்றியத் தலைவர் கரு.சிதம்பரம், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் முருகேசன், ஜெயலலிதா பேரவை முருகேசன், தி.மு.க. சார்பில் ஒன்றியச் செயலாளர் செழியன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் சாக்ளா உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் சார்பில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ராம.அருணகிரி, வட்டாரத் தலைவர் பழனியப்பன், பொதுக்குழு உறுப்பினர் அபிமன்யு, நகரத் தலைவர் கணேசன் மற்றும் மருதுபாண்டியர் பேரவையின் செல்லம், ராக்கி, சரவணன், அகமுடையார் உறவின்முறை மரு.சரவணன், கு.சரவணப்பெருமாள், சேகர் உள்பட ஏராளமானோர் தேவர் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதற்கான ஏற்பாட்டினை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.