சமையல் எரிவாயு விலை உயர்வு !

Saturday, October 6, 2012

புதுடில்லி :

சமையல் எரிவாயு விலையை ரூ.11.42 உயர்த்தியுள்ளது மத்திய அரசு. சமீபத்தில் வீட்டுக்கான சமையல் எரிவாயு எண்ணிக்கையை 6-ஆக குறைத்தது மத்திய அரசு. இதற்கு நாடுமுழுவதும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


மேலும் சிலிண்டர் எண்ணிக்கையை குறைத்ததால் தங்களுக்கான கமிஷன் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூ.11.42 உயர்த்தியுள்ளது மத்திய அரசு. விநி‌யோகஸ்தர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்தியதால் தான் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.