அரிசி ஏற்றுமதியில் முதல் இடத்தை பிடித்த இந்தியா !

Monday, October 29, 2012

அரிசி ஏற்றுமதியில் தாய்லாந்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக யுஎஸ்டிஏ அறிக்கை தெரிவிக்கிறது.

2012ம் ஆண்டில் 9.75 மில்லியன் டன்கள் அரிசியை ஏற்றுமதி செய்துள்ள இந்தியா, உலகிலேயே அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை வகிக்கிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு 10.65 மில்லியன் டன்கள் அரிசியை ஏற்றுமதி செய்த தாய்லாந்து முதல் இடத்தில் இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால், அதன் அரிசி ஏற்றுமதி இந்த ஆண்டில் 6.5 மில்லியன் டன்களாகக் குறைந்துவிட்டது. 

இந்தியாவை அடுத்து வியட்னாம்  7 மில்லியன் டன்கள் அரிசியை ஏற்றுமதி செய்து இரண்டாவது  இடத்திலும், கடந்த ஆண்டு முதல் இடத்தை பிடித்த தாய்லாந்து 3வது இடத்தையும் பிடித்துள்ளன.

2011ஆம் ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்த காரணத்தால் அரிசி உற்பத்தி அதிகரித்து இந்த ஆண்டு ஏற்றுமதியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.