கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென டெல்லி மாஜி எம்எல்ஏ ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி கலை, அறிவியல், சமூக அறிவியல் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால் இதில் விளையாட்டுத்துறை பற்றி அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.ஆனாலும் கடந்த மே மாதம் கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு மத்திய அரசு எம்பி பதவி வழங்கியதை எதிர்த்து டெல்லி மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.
இதில் சச்சின், எம்பி பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டது.இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதன்பின்னர், சச்சினுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனவே, சச்சின் எம்பி பதவி ஏற்று கொண்டார்.துணை ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் சச்சினுக்கு எதிரான 2 வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென டெல்லியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ராம் கோபால் சிங் சிசோதியா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இரண்டு உயர் நீதிமன்றங்களிலும் மாறுபட்ட தீர்ப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதே பொருத்தமாக இருக்கும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.