பிரித்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி !

Thursday, October 4, 2012

அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் திறன்கொண்ட பிரித்வி 2 ஏவுகணை இன்றுவெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் சந்திப்பூர் பகுதியில் உள்ளஅணுகுண்டை சுமந்தபடி 350 கி.மீ வரைசென்று தாக்கக்கூடியது பிரித்வி-2ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனைவளாகத்திலிருந்து சோதித்துப்பார்க்கப்பட்டது.

இந்த ஏவுகணை 500 கிலோ எடையுள்ளஅணு ஆயுதத்தை சுமந்து செல்லும். 9மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணை ஒரு மீட்டர் விட்டம் கொண்டதாகும்.

இந்த சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.